தாம்பரம் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் போலீசார் ஈடுபட்டார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் குற்றச் செயல்களை தடுக்க போலீஸ் கமிஷனர் ரவி அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இதைத்தொடர்ந்து நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையில் தாம்பரம் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட இடங்களில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டார்கள்.
போலீஸார் விடிய விடிய நடத்திய இந்த அதிரடி வேட்டையில் தலைமறைவாக இருந்த 18 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 103 பேர் பிடிபட்டார்கள். 107, 109, 110 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 100 குற்றவாளிகளிடமும் எழுதி வாங்கப்பட்டது. போலீஸின் இந்த அதிரடி சோதனையில் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யப்பட்டதில் 1733 வாகனங்கள் விதிமுறையை மீறியதாக பலரும் பிடிபட்டார்கள். மேலும் 95 லாட்ஜ்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டார்கள்.