Categories
தேசிய செய்திகள்

குஜராத்: “108 அடி உயர அனுமன் சிலை”…. திறந்து வைத்த பிரதமர்…..!!!!!!

குஜராத் மாநிலமான மோர்பியிலுள்ள பாபுகேசவானந்த் ஆசிரமத்தில்108 அடி உயர அனுமன் சிலை நிர்மாணிக்கப்பட்டு இருக்கிறது. இன்று அனுமன் ஜெயந்தியையொட்டி அந்த 108 அடிஉயர அனுமான் சிலையை,  காலை 11 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர்  நரேந்திரமோடி திறந்து வைத்தார். அனுமன்ஜி4தாம் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுதும் 4 திசைகளில் அமைக்கப்பட உள்ள 4 சிலைகளில் இது 2-வது சிலையாகும். இது மேற்கு பக்கத்தில் மோர்பியிலுள்ள பரம் பூஜ்ய பாபு கேசவானந்ஜி ஆசிரமத்தில் நிறுவப்பட்டுள்ளது. அனுமன் வாழ்க்கையுடன் தொடர்புடைய நாட்டின் 4 திசைகளிலும் இருக்கக்கூடிய ஊர்களில் அனுமன் சிலை உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முதலாவதாக வடதிசையில் இமாசலபிரதேச மாநிலம் சிம்லாவில் 2010ஆம் வருடம் அனுமன் சிலை திறக்கப்பட்டது. மேற்குத் திசையில் இந்த சிலை இன்று திறக்கப்பட்டது. அதன்பின் தெற்கே ராமேஸ்வரத்தில் அனுமன் சிலை நிறுவும் பணி தொடங்கயிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கூறியதாவது, “இது வெறும் அனுமன் சிலைகள் அமைப்பதற்கான தீர்மானம் மட்டும் அல்ல. இது ஒரே  பாரதம் ஷ்ரேஷ்ட பாரதம் தீர்மானத்தின் ஒரு பகுதி ஆகும்” என்று கூறினார். முன்பாக வட மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் கூறிய வாழ்த்துச்செய்தியில், “பவன்புத்திரனின் அருளால், அனைவரின் வாழ்வும் எப்போதும் வலிமை, புத்திசாலித்தனம் மற்றும் அறிவு நிறைந்ததாக இருக்கட்டும்” என்று தெரிவித்தார்.

Categories

Tech |