பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக கூடப்பட்ட சட்ட சபைக்கு வருகை புரிந்த துணை சபாநாயகர் மீது பிடிஐ கட்சி உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இம்ரான்கானின கட்சியிலிருந்த சில உறுப்பினர்கள் தங்களது ஆதரவை பி.எம்.எல். கியூ கட்சிக்கு வழங்கியுள்ளார்கள். ஆகையினால் பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரியான உஸ்மான் புஸ்தார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை பஞ்சாப் மாநிலத்தின் கவர்னரான சவுத்ரி ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக சட்டசபை கூடியுள்ளது.
இதில் துணை சபாநாயகரான தோஸ்த் கலந்து கொண்டுள்ளார். அப்போது துணை சபாநாயகர் மீது பிடிஐ கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். அதுமட்டுமின்றி பாத்திரங்களைக் கொண்டும் அவர் மீது எறிந்துள்ளார்கள். மேலும் தங்களது கட்சியிலிருந்து பிரிந்து எதிர்க் கட்சிக்கு ஆதரவு கொடுத்த சில உறுப்பினர்களுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பியுள்ளார்கள். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.