அதில், வில்சனை கொலை செய்துவிட்டு கேரளாவிற்கு தப்பி ஓடியதாகவும், எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சாக்கடை ஓடையில் துப்பாக்கியை வீசி எறிந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, நாகர்கோவிலிலிருந்து தனி படையினர் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவருடன் நேற்று கேரளா மாநிலம் எர்ணாகுளம் பேருந்து நிலையதிற்குச் சென்று அங்குள்ள சாக்கடை ஓடையில் இறங்கி தேடினர்.
காவல் துறையினர் நடத்திய ஒரு மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சாக்கடையிலிருந்து குற்றவாளிகள் இருவரும் கொலை செய்ய பயன்படுத்திய 7.65 எம்.எம். பிஸ்டல், ஐந்து தோட்டாக்களை கண்டெடுத்தனர். இந்தநிலையில் வில்சன் கொலைக்கு பயன்படுத்திய கத்தி திருவனந்தபுரம் அருகே பறிமுதல் செய்யப்பட்டது. சம்பானூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஓடையில் கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
துப்பாக்கி நேற்று பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடத்திவிட்டு நாளை குற்றவாளிகள் இருவரையும் கர்நாடகா அழைத்து சென்று விசாரிக்கவும் தனிப்படையினர் திட்டமிட்டு ள்ளதாக கூறப்படுகிறது