Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொடரும் போராட்டம்… வரும் 18 ஆம் தேதிக்கு பின் எடுக்கப்போகும் முடிவு?…. வெளியான தகவல்….!!!!!

இலங்கை நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னாள் அமைச்சர்களுடன் முக்கியமான ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியது. திபர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும், புதிய அமைச்சரவை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழ்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக வலியுறுத்தி காலி முகத்திடலில் ஒரு வாரத்திற்கு மேல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அங்கு போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏப்ரல் 18ஆம் தேதிக்கு பின் அவர்களை வெளியேற்ற அரசு ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை அங்கு பாதுகாப்பு பணிக்காக கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Categories

Tech |