நொய்டா பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
14 குழந்தைகள் உட்பட 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம் புத் நகர் பகுதியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்திருப்பது அந்த பகுதியில் சுகாதார அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி நொய்டா மற்றும் புது தில்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் இன்று காலை வரையிலான நேரத்தில் 70 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. இதே காலகட்டத்தில் கொரோனா பாதித்ததிலிருந்து 8 பேர் குணமடைந்து உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாதிப்பு அல்லது அறிகுறி தெரிந்தால் உடனடியாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள இலவச எண் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் 1800492211 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ, அல்லது cmogbnr@ gmail.com. ncmogbnr@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் ஒரு தகவல் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.