நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது வருகிற மே 8 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் இந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
3 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு விஷயங்களை கலந்து ஆலோசிக்க உள்ளனர். குறிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த பொது குழுவில் முடிவு செய்யப்பட உள்ளது.