Categories
உலக செய்திகள்

“கடலில் மூழ்கிய ரஷ்யாவின் மாஸ்க்வா கப்பல்”… வெளியாகிய புகைப்படங்கள்……!!!!!

கருங்கடலில் இரு நாட்களுக்கு முன்பு உக்ரைனின் ஏவுகணை தாக்குதலால் வெடித்துச் சிதறி கடலில் மூழ்கிய ரஷ்யாவின் மாஸ்க்வா கப்பல் பற்றி எரிந்தபோது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் மாஸ்க்வா கப்பல் பயங்கரமாக பற்றி எரிவதும், அதனைச் சுற்றி சில மீட்பு கப்பல்கள் உள்ளதும், தூரத்தில் சில ராணுவ கப்பல்கள் மாஸ்க்வா கப்பலை நோக்கி வருவதும் காண முடிகிறது. கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தில் உக்ரைன் அதன் 2 நெப்டியூன் க்ரூஸ் ஏவுகணைகள் வாயிலாக ரஷ்யாவின் மிக முக்கிய போர் கப்பல்களில் ஒன்றான மாஸ்க்வா கப்பலை தாக்கியதாகவும், இதில் கேப்டன் உட்பட அதில் இருந்த 500 பேரும் கொல்லப்பட்டதாகவும் கீவ் தெரிவித்துள்ளது.

2 ஆம் உலகப் போருக்குப் பின் போரில் இழந்த மிகப் பெரிய கப்பல்களில் ஒன்றாக மாஸ்க்வா மூழ்கியது ரஷ்ய ராணுவ கௌரவத்திற்கு மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் அடிப்படையில் ரஷ்யா நேற்று முன்தினம் முதல் உக்ரைனின் கீவ் மற்றும் லிவிவ் நகரங்களை தொடர்ந்து ஏவுகணைகள் வாயிலாக தாக்கி வருகிறது. அத்துடன் ரஷ்யாவின் போர்கப்பல் மூழ்கியதைத் அடுத்து உக்ரைன் – ரஷ்யா இடையில் மட்டுமின்றி, ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலும் பதற்றம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது கிட்டத்தட்ட 3ஆம் உலகப்போர் தொடங்கிவிட்டதற்கான அறிகுறி எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு மாஸ்க்வா கப்பல் மூழ்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 10 ஆம் தேதி மொஸ்க்வா செவஸ்டோபோல் துறைமுகத்துக்கு அருகில் இருக்கும் போது எடுக்கப்பட்ட சாட்டிலைட் படம்.

ஏப்ரல் 7 ஆம் தேதி ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் சொந்த துறைமுகமான ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவிலுள்ள செவாஸ்டோபோலில் எடுக்கப்பட்ட மொஸ்க்வா படம்

(2019) நெப்டியூன் ஏவுகணையினுடைய சோதனைத் தாக்குதல்

Categories

Tech |