Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கோனேரி பட்டியில் நடந்த சிலுவைப் பாதை நிகழ்ச்சி”… இயேசுவின் திருப்பாடுகள், உயிரோவியத்தை தத்ரூபமாக நடித்த இளைஞர்கள்…!!!!

சிலுவைப்பாதை நிகழ்ச்சியின்போது உலக மீட்பர் தலை குழுவை சேர்ந்த பகுதி இளைஞர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டினார்கள்.

சேலம் மாவட்டத்திலுள்ள தம்பம்பட்டி அடுத்திருக்கும் கோனேரிப்பட்டியில் நேற்று புனித வெள்ளியையொட்டி சிலுவைப்பாதை நிகழ்ச்சியானது நடைபெற்றது. சிலுவைப்பாதை நிகழ்ச்சியானது கோனேரிப்பட்டி ஆலய வளாகத்தில் தொடங்கி கெங்கவல்லி செல்லும் சாலையில் இருக்கும் கல்லறை தோட்டம் வரைக்கும் நடைபெற்றது. சிலுவைப்பாதை நிகழ்ச்சியின்போது உலக மீட்பர் தலை குழுவைச் சேர்ந்த பகுதி இளைஞர்கள் 14 நிலைகளை இயேசுவின் திருப்பாடுகள், உயிரோவியம் உள்ளிட்டவற்றை தத்ரூபமாக நடித்துக் காட்டினார்கள்.

இவர்களின் இந்த தத்ரூபமான நடிப்பை பார்த்த கிறிஸ்தவர்கள் கண்ணீர் சிந்தி பிரார்த்தனை செய்த பிறகு கல்லறை வரை சென்றார்கள். கோனேரிப்பட்டி பகுதி கிறிஸ்தவர்கள் இந்த ஏற்பாடு செய்திருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கொண்டையம்பள்ளி, உலிபுரம் உள்ளிட்ட பகுதியில் இருக்கும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |