Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் மாவட்டத்திலுள்ள கொங்கணாபுரம் அருகே இருக்கும் விவசாயி வீட்டில் திடீரென தீ விபத்து”… போலீசார் விசாரணை…!!!!

கொங்கணாபுரம் அருகே உள்ள தங்காயூர் கிராமத்தில் இருக்கும் விவசாயின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள கொங்கணாபுரம் அருகே இருக்கும் தங்காயூர் கிராமம் மணல்மேடு பகுதியில் வாழ்ந்து வருபவர் விவசாயி குப்பமுத்து. இவரின் மனைவி மணி. இவர்கள் எப்பொழுதும்போல் நேற்றுக்காலை காட்டில் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

அப்போது இவர்களின் வீட்டின் மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பற்றி எரிந்த தீயை அணைத்தார்கள். ஆனால் தீவிபத்தில் வீட்டிலிருந்த குளிர்சாதனப்பெட்டி, ஆதார் கார்டு ஆகியவை எரிந்து சேதமடைந்தது. இதுபற்றி கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Categories

Tech |