பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தன்னால் வெற்றிபெற முடியும் என முக்கிய பெண் வேட்பாளரான லு பென் உறுதியாக தெரிவித்துள்ளார். பிரான்சின் உயர்மட்ட பதவியை ஏற்பதற்கான 2ஆம் கட்டத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் முக்கிய போட்டியாளரான மரீன் லு பென் (Marine Le Pen), இத்தேர்தலில் தன்னால் வெற்றிபெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று தெற்கு பிரான்சிலுள்ள மக்ரோனுக்கு அதிக ஆதரவுள்ள ஒரு நகரத்திற்குச் சென்றபோது இவ்வாறு கூறினார். இதற்கிடையில் லு பென் ஆதரவாளர்களாலும், எதிர்ப்பாளர்களாலும் வரவேற்கப்பட்டதால் அவருக்கு கலவையான பதில் கிடைத்தது. எதிர்ப்பாளர்கள் அவரது குடும்பத்தை இனவெறி என்று கூறி அவரை அங்கு இருந்து போக சொன்னார்கள்.
அதன்பின் லு பென் செய்தியாளர்களிடம் பேசியபோது , எனக்கு பின்னால் மக்கள் இருப்பது ஜனநாயகத்தில் மிக முக்கியமான விடயம்” என்று அவர் தெரிவித்தார். சென்ற 2 ஜனாதிபதித் தேர்தல்களிலும் லு பென் வேட்பாளராக இருந்துள்ளார். அவர் பிரான்சில்மிகவும் பிரபலமானவர் என்று கருத்துக் கணிப்புகள் காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் தீவிர வலதுசாரி வேட்பாளரான லு பென் தனது தோற்றத்தை மென்மையாக காட்டி வருகிறார். அத்துடன் அவர் பிரான்ஸ் மக்களின் தினசரி வாழ்க்கையில் அடிப்படை தேவைக்கான செலவுப் பிரச்சினைகளில் தன் பிரச்சாரத்தை முன் வைத்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் 2-வது பெரிய பொருளாதாரத்தை யார் வழிநடத்துவார்கள் என்பதைத் தீர்மானிக்கும் 2வது தேர்தலுக்கு 8 நாட்கள் உள்ள நிலையில், கருத்துக் கணிப்புகள் மத்தியவாத ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் லு பென்னை விட சற்று முன்னிலையில் உள்ளதாக காட்டுகிறது.