Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு சென்ற வாலிபர்…. கடையில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

கடையின் பூட்டை உடைத்து செல்போன்  திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா பஜாரில் செல்வபாரதி என்பவர் செல்போன்  சர்விஸ்  கடை ஒன்றை  வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு  கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இன்று காலை  வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு செல்வபாரதி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து செல்வபாரதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து  செல்போன் திருடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |