Categories
அரசியல்

வீட்டுக் கடன் தலைவலியா….. இனி கவலையை விடுங்க…. தப்பிக்க சூப்பர் சலுகை….!!!!

எஸ்பிஐ யோனோ அப் மூலமாக வீட்டு கடன் வசதியை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். ஏற்கனவே வாங்கிய வீட்டு கடன் அல்லது தனி நபர் கடன் மீது டாப் அப் லோன் என்று கடன் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கான வட்டி விகிதம் குறைவு .வீட்டுக் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இந்த வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வீட்டுக்கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெரிய நிவாரணம் வழங்கியுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா யோனோ அப் மூலமாக வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த வட்டியில் பல்வேறு சலுகைகளுடன் டாப் அப் லோன் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.

இதனை பெறுவதற்கு 18 முதல் 70 வயது வரை இருக்க வேண்டும். 10 லட்சம் அல்லது அதற்கும் மேல் வீட்டு கடன் பெற்றவர்கள் இதில்தான் பெற்றுக்கொள்ளமுடியும். இதற்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே டாப் அப் லோன் பெற்றிருக்கக் கூடாது. இந்த வசதியைப் பெறுவதற்கு வங்கி கிளைக்கு அலைய தேவையில்லை. யோனா ஆப் மூலமாக எளிதில் வேலையை முடித்துவிடலாம். வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் இந்த வசதியை பயன்படுத்த முடியும் . டாப் அப் லோன் மூலமாக  ஸ்டெப்களிலேயே கடன் பெறலாம். கடன் தொகையை உடனடியாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து விடும் வசதியும் உள்ளது. இந்த கடனை பெறுவதற்கு வங்கி அதிகாரி யாரிடமும் பேச தேவையில்லை .

Categories

Tech |