Categories
உலக செய்திகள்

சரணடைந்த வீரர் உளவாளி…. போர்க் கைதி அல்ல…. ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை….!!!

ரஷ்யா படைகளிடம் சரணடைந்த பிரித்தானிய வீரரை கைதிகளாக கருத முடியாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் தலைநகர் மரியுபோலில் நடந்த கடுமையான போரில் வெடிபொருள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் பிரித்தானிய வீரர் ஐடன் அஸ்லின் (28) என்பவர் ரஷ்ய படைகளிடம் சரணடைந்தார். ஆனால் சரணடைந்துள்ள பிரித்தானிய வீரர் தொடர்பில் ஜெனிவா ஒப்பந்தத்தை நிராகரித்து, அவரை உக்ரைனின் கூலிப்படை என நிரூபிக்க ரஷ்யா முயன்று வருகிறது. இதனை தொடர்ந்து இவர் தொடர்பான காட்சிகளை ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தது.

இதற்கிடையில் ஐடன் அஸ்லின் இரட்டை குடியுரிமை கொண்டவர் அவருக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றும் அவர் பிரித்தானியர் என்பதால் ரஷ்ய படைகள் அவரை மிக கடுமையாக நடத்த வாய்ப்பிருப்பதாக குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யா தற்பொழுது அஸ்லின் மேற்கத்திய நாடுகளின் உளவாளியாக இருக்க வாய்ப்பிருப்பதாக கற்பக தெரிவித்து வருகிறது.

இதுமட்டுமின்றி ஐடன் அஸ்லின் பிரதானியாக கூலிப்படை எனவும் உக்ரைனில் காட்சிகளுக்காக அவர் போரிட்டு வந்துள்ளார் எனவும் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடத்தப்படும் விசாரணை முதற்கட்டத்தில் இருப்பதாகவும், மேற்கத்திய நாடுகளின் உளவாளிகள் உக்ரைனில் ஊடுருவியுள்ளதை இவர் மூலம் அரசு அமல்படுத்தும் எனவும் ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதற்கிடையில் ஐடன் அஸ்லின் மிகக் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. உக்ரைன் அமைதியை நிலைநாட்ட களமிறக்கப்பட்டுள்ள ரஷ்யா வீரர்களை கொலை செய்வதாக அரசு அதிகாரி ஒருவர் கூற, அதற்கு பதிலாக நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம் என்று அஸ்லின் கூறுகிறார். அவர் முகத்தில் இருக்கும் காயங்களும் ரஷ்ய அதிகாரிகளிடம் அவர் அளிக்கும் பதில்களும் அவரை ரஷ்யா வீரர்கள் கடுமையாக சித்திரவதைக்கு உட்படுத்தி இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. ரஷ்ய வீரர்களிடம் சரணடைவதற்கு முன்னர் நாற்பத்தி எட்டு நாட்கள் நாங்கள் முடிந்தவரை முயற்சி செய்தோம், ஆனால் சரணடைவதைத் தவிர வேறு வழி இல்லை என அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |