Categories
தேசிய செய்திகள்

சீச்சி…. கோவில் திருவிழாவில் நடைபெற்ற அந்த மாதிரி நடன நிகழ்ச்சி…. அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

ஆந்திரப்பிரதேச மாநிலதில் நடைபெற்ற நிர்வாண நிகழ்ச்சி 10 பேரை கைது செய்த காவல் துறையினர்.

ஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தள்ளரேவு பிரதேசத்திற்கு உட்பட்ட உப்பங்கலா கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. கடந்த 14ஆம் தேதி தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்ற திருவிழாவில் கிராமத்தில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கோவில் திருவிழாவில் நிர்வாண நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கொரிங்கா போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை 3 மணிக்கு இடையில் இந்த நடனம் அரங்கேறி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக 10 பேரை கைது செய்துள்ளோம். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |