Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிறப்புறுப்பில் மதுபாட்டிலை சொருகி பாலியல் ரீதியாக கொடுமை செய்தார்”… அம்பர் ஹெட் மாஜி கணவர் மீது குற்றச்சாட்டு…!!!

தனது முன்னாள் கணவர் பிறப்புறுப்பில் மதுபாட்டில் திணித்து தன்னை கொடுமைப்படுத்தியதாக நீதிமன்றத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஆம்பர் ஹெர்ட்.

நடிகர் ஜானி டெப், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார். இத்திரைப்படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் அன்னி அல்லிசன் என்பவரை சென்ற 1983ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடங்கள் கூட முழுமையாக வாழாமல் பிரிந்தார். இதன்பிறகு ஆம்பர் ஹெர்ட் என்பவரை சென்ற 2015-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரையும் 2017 ஆம் வருடம் விவாகரத்து செய்தார்.  ஆம்பர் ஹெர்ட் , என்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் தனது விரலை துண்டித்ததாகவும் இதற்கு 350 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தனக்கு தர வேண்டும் என பல ஆதாரங்களை நீதிமன்றத்தில் காட்டி மூன்று வருடங்களாக வழக்கு நடத்தி வருகின்றார்.

அந்த வழக்கு தற்போது மீண்டும் சூடு பிடித்த நிலையில் ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சாட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று விசாரணை நடந்தபோது, ஆம்பர் ஹெர்ட் கூறியதாவது, நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றபோது தனது உறுப்பில் மது பாட்டிலை கொண்டு சொருகி பாலியல் ரீதியாக கடுமையான துன்புறுத்தலை ஜானி டெப் தந்தார் என்ற குற்றச்சாட்டை சுமத்தினார். இதனால் எனது பிறப்பு உறுப்பில் காயம் ஏற்பட்டதாகவும் அதற்காக நான் சிகிச்சை பெற்றதாகவும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். நானும் ஜானி டெப்பை  மற்றவர்கள் போல் நல்லவர் என நம்பி தான் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அவர் குடிபோதையில் இருக்கும் பொழுது செய்யும் கொடுமைகளை என்னால் தாங்க முடியாமல் தான் விவாகரத்து முடிவுக்கு வந்ததாக கூறினார். இவர் இவ்வாறு கூறியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |