சிம்பிள் எனர்ஜி நிறுவனமானது இந்திய சந்தையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு தனது முதல் நிறுவனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படும் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலை சிம்பிள் எனது நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சுஹாஸ் ராஜ்குமார் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.
ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான உற்பத்தி சோதனை ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், இந்த ஆண்டு ஜூன் மாதம் வினியோகம் துவங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி துவங்கும் போது இரண்டாவது வாகனமும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும் முதல் மாடலை தொடர்ந்து எங்களின் இரண்டாவது வாகனம் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறைந்த விலையில் கிடைக்கும் மாடலாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாடலின் விலை போட்டி நிறுவனங்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.