Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கவனக்குறைவு….. அலட்சியம்….. பள்ளி வேன் மோதி….. 1 வயது குழந்தை மரணம்…. டிரைவர் கைது…!!

விழுப்புரம் அருகே பள்ளி  வேன் மோதி 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் கம்பம் தொகுதியை அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி தங்கம். இவர்கள் இருவருக்கும் வினோதினி கிருத்திக்க்ஷா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். வினோதினி தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கிருத்திக்க்ஷா ஒரு வயது பெண் குழந்தை.  இந்நிலையில் வினோதினியை பள்ளிக்கு கூட்டி செல்ல தனியார் பள்ளி வாகனம் அவரைக் கூட்டிச் செல்ல வீட்டின் முன் வந்து நின்றது.

இதையடுத்து வினோதினியை வேனில் ஏற்றி விடுவதில் கவனம் காட்டிய பெற்றோர்கள், இளைய மகளை கவனிக்கவில்லை இதையடுத்து இளைய மகள் டிரைவர் இருக்கைக்கு கீழே ஓரமாக டயர் அருகே நின்று கொண்டிருந்தார். டிரைவரும் குழந்தையை  கவனிக்காமல் வலது புறமாக வேகமாக திருப்ப குழந்தை மீது வேன் மோதி படுகாயம் அடைந்தது.

இதையடுத்து குழந்தையை தூக்கிக் கொண்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்து. இதையடுத்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேன் டிரைவரை  கைது செய்தனர்.

Categories

Tech |