பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி நொண்டிமேடு பகுதியில் உள்ள மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு கடந்த 12-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.