இங்கிலாந்து நாட்டின் சுகாதார அலுவலர்கள் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி பெற்றோர்கள் கிண்டர் வகை சாக்லேட்டுகளை தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்கள்.
இங்கிலாந்து நாட்டின் சுகாதார அலுவலர்கள் ஈஸ்டர் பண்டிகையையொட்டி பெற்றோர்கள் கிண்டர் ஜாய் சாக்லேட்டுகளை தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்கள். ஏனெனில் அண்மையில் இங்கிலாந்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருத்தி கிண்டர் சாக்லேட்டுகளை உட்கொண்டு நோய்த் தொற்றுக் கிருமியால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே அமெரிக்கா, கனடா, ஜெர்மனி முதலான நாடுகளில் கிண்டர் வகை சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்ற கிருமி இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் ஈஸ்டர் பண்டிகையையொட்டி வாங்கி இருக்கும் kinder சாக்லேட்டுகள் அனைத்தையும் திருப்பிக் கொடுக்குமாறு இங்கிலாந்து சுகாதார அலுவலர்கள் அந்நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.