இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வருகின்ற 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வருகின்ற 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இவருடைய இந்த சுற்றுப்பயணம் உக்ரேன் போர் விவகாரத்தை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் உக்ரைனுக்கு வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
ஆனால் இந்தியா மேல் குறிப்பிட்டுள்ள போர் விவகாரத்தில் தற்போது வரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும் உக்ரேன் விவகாரத்தில் ஐ.நாவில் ரஷ்யாவிற்கு எதிராக நடந்த தீர்மானத்தில் கூட இந்தியா வாக்களிக்கவில்லை. ஆகையினாலேயே இங்கிலாந்து பிரதமரின் இந்த வர்த்தக ரீதியான சுற்றுப்பயணம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.