ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘கேஜிஎப் சாப்டர் 2’. படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது.
யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை உலகமே கொண்டாடி வருகிறது. இது போக படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக கேஜிஎஃப் 2 படத்தின் படத் தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்னியின் பங்கு பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. 19 வயது இளைஞரான இவர் எப்படி இவ்வளவு கச்சிதமாக ஒரு படத்தை எடிட்டிங் செய்தார் என்ற ஆச்சரியத்தில் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகமே ஆச்சரிய கடலில் மூழ்கியுள்ளது.
இந்த ஆச்சரியத்தில் இருந்து ரசிகர்கள் மீண்டு வருவதற்குள் இந்த கேஜிஎஃப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது இசை. தன் இசையால் படத்திற்கு கூடுதல் பிரம்பிப்பை ஏற்படுத்தியுள்ளார் ரவி பஸ்ரூர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இரும்புப் பட்டறையில் வேலை செய்துள்ளார் என்று சொன்னால் நம்மில் எத்தனை பேரால் நம்ப முடியும். ஆனால் அதுதான் உண்மை. கர்நாடகாவில், குண்டாபுரா தாலுக்காவிலுள்ள ஒரு கிராமத்தில் எளிய குடும்ப பின்னணி கொண்டவர்தான் இந்த ரவி பஸ்ருர். தனது சிறு வயது முதலே இசையின் மீது இவருக்கு ஆர்வம் இருந்துள்ளது.
சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு தனது தந்தையின் இரும்பு பட்டறையில் தொழிலாளியாக சிற்பங்களை செய்து வந்துள்ளார். இப்படி ரவி பஸ்ரூர் பற்றி வெளியாகியிருக்கும் செய்தி ஒன்று மற்றுமொரு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இவருக்கு கே.ஜி.எஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீலன்தான் முதல் முதலாக இசையமைக்க வாய்ப்பை கொடுத்துள்ளார்.