Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீவிபத்து…. பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை பழங்கோட்டை சாலையில் ரமேஷ் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தீப்பெட்டி தொழிற்சாலையில் உள்ள மருந்து குச்சிகள் உள்ள குடோனில் திடீரென குச்சிகளில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. இதனை பார்த்த அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் இதுகுறித்து உடனடியாக கழுகுமலை தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கழுகுமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |