Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே அணியே இவர நம்பி தான் இருக்கு…. தினமும் ஆலோசனை வழங்கும் தோனி…. வெளியான தகவல்….!!

மும்பைக்காரரான பவுலர் முகேஷ் சவுத்ரிக்கு தோனி தினமும் தனியாக ஆலோசனை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 4 போட்டிகளில் படுதோல்வி அடைந்துள்ளது. இதனையடுத்து 5 ஆவது போட்டியில் சிஎஸ்கே 200+ ரன்களை குவித்து பெங்களூரு அணியை வென்றுள்ளது. இந்த போட்டியை சிஎஸ்கே அணி வென்றதற்கு பேட்ஸ்மேன்களான ராபின் உத்தப்பா, ஷிவம் துபேவின் ஆட்டங்கள் தான் மூல காரணமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருக்க சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்ல இனி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளது. இதற்கிடையே சிஎஸ்கே பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பி வருவதற்கு அந்த அணியில் தீபக் சஹர் இல்லாததுதான் மூலகாரணமாக உள்ளது.

இவருக்கு பதிலாக மாற்றுப்பவுலரை தேர்வு செய்யும் பணியில் சிஎஸ்கே மும்முரம் காட்டி வருகிறது. இருப்பினும் முகேஷ் சவுத்ரிக்கு தான் சிஎஸ்கே அணியில் தொடர்ந்து பந்துவீச்சுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு மூலகாரணமாக அவர் மும்பை மைதானங்களில் பலமுறை சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் தோனி முகேஷ் சவுத்ரிக்கு மட்டும் தினமும் தனியாக ஆலோசனை வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |