நடிகர் சிவக்குமார் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டதற்கான காரணம் பற்றி சித்ரா லக்ஷ்மணன் கூறியுள்ளார்.
1960-களிலிருந்து பிரபல நடிகராக வலம் வந்தவர் சிவக்குமார். இவருடைய மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே தற்போது பிரபல நடிகர்களாக வலம் வருகின்றார்கள். இவர் சினிமாவில் மட்டும் அல்லாமல் சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் வீட்டுக்கு வீடு வாசப்படி பந்தம் சித்தி அண்ணாமலை உள்ளிட்ட தொடர்களில் நடித்து ஹிட்ஸ் தொடர்களாக மாற்றினார். கடைசியாக 2001 ஆம் வருடம் அஜித் நடிபில் வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அவர் நடித்த வள்ளி சீரியல் 2006ஆம் வருடம் 2008ஆம் வருடம் வரை ஒளிபரப்பான தொடரில் நடித்து இருந்தார். அதன் பிறகு எந்த சீரியலிலோ படங்களிலோ அவர் நடிக்கவில்லை.
நடிக்காமல் இருப்பதற்கான காரணத்தை சிவகுமார் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இதற்கான காரணம் பற்றி நடிகரும் இயக்குனருமான சித்ரா லக்ஷ்மணன் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, சிவக்குமார் ஒருமுறை தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த தொடரில் நடித்துக் கொண்டிருந்த ஒரு நடிகை போனில் கத்தி கத்திப் பேசி இருக்கின்றார். அப்போது சிவகுமார் அந்த பெண்ணிடம் நான் நடித்து முடிக்கும் வரை கொஞ்சம் போன் பேசாமல் இருக்குமாறு சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த நடிகையோ இத்தனை ஆண்டுகளாக நடிக்கிறீங்களா நீங்க பேசறத டப்பிங்ல பாத்துக்கோங்க என கூறிவிட்டாராம். இச்சம்பவத்தின் காரணமாக சிவகுமார் நடிப்பதை விட்டு விட்டதாக சித்ரா லக்ஷ்மணன் கூறியுள்ளார்.