பொதுவாக முருங்கை என்பது அதிக மருத்துவ குணம் கொண்ட ஒரு தாவரம் என்று நம் அனைவருக்கும் தெரியும்…அதன் தனிப்பட்ட மருத்துவ குணங்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம்!!
முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி,புரதம், இரும்புச்சத்து உள்ளது.
1. முருங்கை இலையை எடுத்து அதில் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கைகால் அசதி நீங்கும்.உடல் பலம் பெரும்.
2. முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துவர ரத்தசோகை நோய் தீரும் வளரிளம் பெண்களுக்கு அதிக நன்மையை உண்டாக்கும்.
3. முருங்கைக் கீரையை உணவுடன் அதிகம் வேகவிடமல் பொரியலாக சமைத்து உண்ண கழுத்துவலி படிப்படியாக குணமாகிவிடும்.
4. முருங்கைப்பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தப் படுத்தி அத்துடன் 250 மில்லி பசும்பால் சேர்த்து கொதிக்கவிடவும் 48 நாட்கள் இதை குடித்து வர ஆண்மை பெருகும் நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
5. முருங்கைப் பூவை சமளவு துவரம்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் உண்ண கண் எரிச்சல் வாய் நீர் ஊறல் வாய் கசப்பு மாறும்.
6. முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும். முருங்கைக்காய் கோழையை அகற்றி காமம் பெருக்கும். முருங்கை பிசின் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல் தும்மல் உண்டாகும்.
7. முருங்கைக்கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாக தூசி பூசி வர நீர்கட்டி உடைத்து சிறுநீரை பெருக்கும்.