Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  வேலு என்ற  மகன் இருந்துள்ளார்.இந்நிலையில் வேலு  வேலைக்கு சென்றுவிட்டு மன்னார்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.  அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி வேலுவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த வேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேலுவின்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |