Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“வெளுத்து வாங்கிய மழை” அடியோடு சரிந்து பயிர்கள்…. வேதனையில் விவசாயிகள் ….!!!!

பெய்த கனமழையால் உளுந்து  பயிர்கள் சேதமடைந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் தற்போது  3 ஆயிரம்  ஏக்கர் பரப்பளவில் கோடை கால  பயிரான உளுந்து, பச்சை பயிர் போன்றவற்றை சாகுபடி செய்தனர். இந்த பயிர்கள் இன்னும் சிறிது நாட்களில்  அறுவடை செய்ய தயாரான நிலையில் இருந்தது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் பயிர்கள் வயலில் சரிந்து முளைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் சேதம் அடைந்த பகுதிகளை வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில்  சென்று ஆய்வு செய்து உரிய இழப்பீடு  வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |