ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால் அனைத்து வங்கிகளிலும் – ஏடிஎம்களிலும் இல்லை. இது ஒரு குறையாகவே இருந்தது. இந்த நிலையில் அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி கொண்டு வரப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை பல தேசிய வங்கிகள் அறிமுகம் செய்த நிலையில், ஏடிஎம் கார்டுகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகின. இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, கிராமப்புற மக்கள் இன்னும் ஏடிஎம் காடுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருவதால் தடை விதிக்க முடியாது என்று திட்டவட்டமாக இந்த செய்தியை மறுத்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய தேவையில்லை.