Categories
உலகசெய்திகள்

எலான் மஸ்க்கின் முயற்சி…. முட்டுக்கட்டை போடும் பிரபல நிறுவனம்…!!!!!

எலான் மஸ்கின் முயற்சியை தடுக்கும் வகையில்  பங்குதாரர்கள் உரிமை திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டுவிட்டரில் பேச்சுரிமை மறுக்கப்படுவதாக விமர்சனம் செய்து வரும் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.12 லட்சம் கோடி) வாங்கிக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், டுவிட்டர் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வைத்திருக்கும் சவுதி அரேபியா இளவரசரான  அல்வலீத் இதனை நிராகரித்த்திருக்கிறார். ஆனாலும் நிறுவனத்தை கைப்பற்ற தன்னிடம் வேறு  திட்டம் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், விரோதமான முறையில் நிறுவனத்தை கையகப்படுத்த துடிக்கும் எலான் மஸ்கின் முயற்சியை தடுக்கும் விதமாக பங்குதாரர்கள் உரிமை திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த திட்டம் எந்தவொரு தனி நபர், நிறுவனம் அல்லது குழுவும் பிரீமியம் செலுத்தாமல், நிறுவனத்தின் மீது முழுக் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |