பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணமங்கை பகுதியில் மிக பழமையான பக்தவத்சல பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் பக்தவச்சல பெருமாள், சீதேவி மூதேவி நாச்சியாருடன் சிறப்பு தேரில் எழுந்தருளினார். இந்த தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வெங்கட்ராம், கோவிந்தா என்று கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்து பெருமாளை தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.