உக்ரைன் மீதான ரஷிய போர் தொடர்ந்து 50 நாட்களை கடந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. தலைநகர் கீவில் ரஷிய படைகள் வெளியேறிய பின் நகருக்கு வெளியே அப்பாவி மக்கள் கூட்டம் கூட்டமாய் கொன்று குவிக்கப்பட்டிருப்பது வெளியுலகுக்கு தெரிய வந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைனில் இதுவரை 4,633 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பதிவு செய்துள்ள ஐ.நா. சபை, இது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறி இருப்பது அடிக்கோடிட்டு காட்டத்தக்கதாகும்.
இந்நிலையில் தங்கள் நாட்டின் கிராமங்களை குறிவைத்து உக்ரைன் தாக்கியதாக குறை கூறிய ரஷ்யா, இதற்கு பதிலடி தர போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தலைநகர் கீவ், லிவிவ் போன்ற நகரங்களில் ரஷ்யப் படைகள் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தி இருக்கின்றது. ரஷ்ய ராணுவ தளபதிகள் தலைநகர் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும் என மிரட்டினர். அதனை செயல்படுத்தியும் வருகின்றனர், வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலமாக மக்களை பாதுகாக்க உக்ரைன் முயற்சி செய்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.தலைநகர் கீவில் உள்ள ராணுவ தொழிற்சாலை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையொட்டி ரஷ்ய ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் வைகோ கூறும்போது, எதிரிகளின் 16 இலக்குகள், உபகரணங்கள், கிடங்குகள், ஆயுத சேமிப்பு தளங்கள் போன்றவை துல்லியமான தாக்குதல்கள் மூலம் அளிக்கப்பட்டிருக்கிறது.