தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது. அதனால் பொதுமக்கள் வெளியில் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. அதிலும் குறிப்பாக நீண்ட தூரம் செல்ல வேண்டிய பொதுமக்கள் ரயில் சேவை இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்ததால் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக வழங்கப்பட்டது. அதனால் பொது போக்குவரத்தை மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து வித பயணிகள் ரயில் சேவைகளும் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோடைகாலத்தில் வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம், மங்களூர், காரைக்கால், நாகர்கோவில், மதுரை, கொல்லம், திருவனந்தபுரம், தஞ்சாவூர் செல்லும் ரயில்களில் படுக்கை வசதிகள் கொண்ட கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது. இதனால் இந்த ரயில்களில் காத்திருப்போர் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.