Categories
உலக செய்திகள்

ஜப்பான் கடல் பகுதியில் மீண்டும்… ஏவுகணை பரிசோதனை நடத்திய வடகொரியா…. லீக்கான தகவல்….!!!!!

வட கொரியா அணு ஆயுதங்களை தாங்கிசெல்லும் ஏவுகணைகளை சோதனை மேற்கொண்டு உலக நாடுகளுக்கு அவ்வபோது அதிர்ச்சி கொடுத்து வருகிறது. தொலை தூரம் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைப்பர் சோனிக் ஏவுகணை என்று பல விதமான ஏவுகணைகளை வட கொரியா பரிசோதித்து வருகிறது. அதாவது அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் அடிப்படையிலும் தங்களது ஆயுத பலம் குறித்து உலக நாடுகளுக்கு வெளிப்படும் வகையிலும் இந்த ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது.

சென்ற மாதம் 24ஆம் தேதி 5 வருடங்களில் இல்லாத அடிப்படையில் புதிய மற்றும் அதிகசக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா பரிசோதனை செய்தது. கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்ககூடிய தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனையை நடத்தி அமெரிக்காவுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இந்த வகையான ஏவுகணையானது ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்லும் திறனுடையது. அத்துடன் அமெரிக்காவையும் அடைந்து தாக்ககூடிய வல்லமை வாய்ந்தது.

இந்த ஏவுகணை 1,100 கிலோ மீட்டர் தொலைவுக்கு பறந்து சென்று இருக்கிறது. இதேபோல் 6 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் ஒரு மணிநேரம் பறந்து சென்று பின் ஜப்பானிய கடல் பகுதிகளில் விழுந்துள்ளது. இந்நிலையில் ஜப்பான் கடல் பகுதியில் மீண்டும் 2 ஏவுகணைகளை ஏவி வட கொரியா பரிசோதனை செய்து இருக்கிறது. இதனை தென் கொரியாவின் பாதுகாப்புபடை பிரிவு இன்று காலை தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் ஹேம்ஹங் பகுதியில் வைத்து பரிசோதனை செய்யப்பட்ட இந்த இரு ஏவுகணைகளும் 110 கிலோ மீட்டர்கள் (68 மைல்கள்) தொலைவை சென்று தாக்கி உள்ளது. அதிக அளவாக 25 கிலோ மீட்டர் (15.5 மைல்கள்) உயரத்திற்கு பறந்து சென்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் சமீபத்திய பரிசோதனையை தொடர்ந்து தென்கொரியாவின் பாதுகாப்பு, ராணுவ மற்றும் உளவு அமைப்புகள் இணைந்து கூட்டாக அவசரகால ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திள்ளன.

Categories

Tech |