Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழை காக்க வேண்டும் என கூறும் திமுக….. தேநீர் விருந்தில் பங்கேற்காதது ஏன்? – ஜெயக்குமார்…!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தது. ஆனால் அதிமுக கலந்து கொண்டது. இதனையடுத்து திமுக தேநீர் விருந்தில் கலந்துகொள்ளாதது குறித்து அதிமுக சார்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆளுநரின் தமிழைக் காக்க வேண்டும் என்று கூறும் திமுக, தேநீர் விருந்தில் பங்கேற்காதது ஏன்? தமிழையும், தமிழர்களையும் போற்றும் வகையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக கலந்துகொண்டது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஆளுநர் தந்த தேநீர் விருந்தில் திமுக பங்கேற்காதது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் வேதனையளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |