Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு பிந்தைய நீண்ட கால பாதிப்புகள் என்ன….? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்….!!!!

கொரோனாவுக்கு பின்பு நீண்ட கால பாதிப்புக்கள் என்ன அவற்றுக்கான சிகிச்சை என்ன என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை இறுதிகட்டத்தில் உள்ளது .ஆனால் சிகிச்சைக்கு பின்னர் அதிலிருந்து மீண்ட பலரும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு நீண்டகாலம் ஆளாக நேர்கிறது. நாட்டில் தற்போது கொரோனா குறைந்த போதும் ஒரு சில இடங்களில் அதற்கான அறிகுறிகளை காணமுடிகிறது. அப்படி நீண்ட காலமாக நோயாளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

ஆனால் உலக சுகாதார அமைப்பு தற்போதைய ஆதாரங்கள் தோராயமாக 10 முதல் 20 சதவீத மக்கள் ஆரம்ப தொற்றில் இருந்து மீண்ட பிறகு பல்வேறு விளைவுகளை அனுபவிக்கின்றன என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக நுரையீரல் சேதம் ஏற்படுகின்றது, கண் பிரச்சனையால் அவதிபடுகின்றனர், இதயத்துடிப்பு அதிகரிக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொற்றிலிருந்து சமாளிக்க ஒரே வழி வேகமாக மற்றும் வழக்கமான உடற்பயிற்சி, சத்தான உணவுகள், மனதை அமைதிப்படுத்தும் செயல்பாடுகளால் தான் முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |