Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருவேளை ஊருக்கு தான் உபதேசம் போலும்…. ஓபிஎஸ் காட்டம்…!!!!

இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்ற கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஓபிஎஸ், ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவர் விளம்பரப் படுத்துவது என ஹிந்தி மொழி விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். ஒருவேளை ஊருக்குத்தான் உபதேசம் போலும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை அறிவிப்புகளில் இந்தி மொழி பெயர்க்கப்பட்டு தொழில் துறை இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Categories

Tech |