பாலக்காடு மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசனை இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். நேற்று பாலக்காடு எலப்புள்ளியில் SDPI கட்சியின் நிர்வாகி சுபைர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் குற்றம்சாட்டி வரும் நிலையில் RSS பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. நேற்றைய கொலைக்கு பதிலடி கொடுக்க வாய்ப்பு உள்ளதால், மாநிலம் முழுவதும் டிஜிபி எச்சரிக்கை விடுத்திருந்தார். முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
இதற்கிடையில், 24 மணி நேரத்திற்குள், இரண்டாவது கொலை சம்பவம் அரங்கேறியது கேரளா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் இரண்டு அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20ஆம் தேதி மாலை 6 மணி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உஷார் கொடுக்கப்பட்டுள்ளது.