அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக அனுமதியின்றி எம். சாண்ட் மணல் ஏற்றிச் செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் பாண்டாங்குடி விலக்கு சாலை சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அனுமதியின்றி எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த இரண்டு டிப்பர் லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய லாரி ஓட்டுநர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.