Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு முன்பு நிறுத்தியிருந்த வாகனம்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

இருசக்கர வாகனத்தை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள எம்.சுப்புலாபுரம் சுதர்சனம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சுதர்சனம் தனது இரு சக்கர வாகனத்தை உறவினர் கடையில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு சுதர்சனம் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சுதர்சனம் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிவகாசியை சேர்ந்த பாண்டி என்பவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பாண்டியை காவல்துறையினர் கைது செய்து இரு சக்கர வாகனத்தை மீட்டனர்.

Categories

Tech |