Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த கண்மாய்” அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

கண்மாய் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதுவயல் கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாயை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற  வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதனையடுத்து   மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி தாசில்தார் அந்தோணி ராஜ், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த  கண்மாயை அகற்றினர். இந்த கண்மாயின் மூலம்  ஆட்டூர், ஆதியாகுடி, கோவணி, பாரூர் வழியாக நூற்றுக்கணக்கான கண்மாய்களுக்கு உபரி நீர் செல்கிறது.

Categories

Tech |