Categories
ஆட்டோ மொபைல்

அசத்தலான அம்சங்களுடன்…. பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அறிமுகம்….!!!!

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி 52 ஸ்மார்ட் போன் இந்தியாவில் ஏப்ரல் மாத  கடைசியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூபாய் 20,000 ஆகும். இந்த ஸ்மார்ட் போனில் 6.6 இன்ச் 2400×1080 pixel FHD×Amloed டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 90HZ ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப் டிராகன் 680 processor கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அட்ரினோ 610 GPU, 4 ஜிபி/6 ஜிபி ரேம் உள்ளது. இந்த போனில் 128 ஜிபி Storage உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 50MP ப்ரைமரி கேமரா, 2MP மைக்ரோ கேமரா, 16MP செல்பி கேமரா உள்ளது. இந்த போனில் 5000MAH பேட்டரி வசதி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் 3.5mm audio jack, streo speaker, Dolby Atmos போன்றவைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |