பிரபல சாம்சங் நிறுவனம் தங்களுடைய பழைய ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு 12 சார்ந்த அப்டேட் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் Galaxy M62 ஸ்மார்ட் போனிற்கு ஆண்ட்ராய்டு 12 யுஐ 4.1 அப்டேட் வழங்கப்பட்டது. இதனையடுத்து Samsung Galaxy A32 5 ஜி ஸ்மார்ட் போனிருக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாம்சங் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த Samsung Galaxy A32 5 ஜி ஆண்ட்ராய்டு 12 யுஐ 4.1 ஸ்மார்ட் போன் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்பிறகு மற்ற பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.
இந்நிலையில் Samsung Galaxy A32 4ஜி மாடலுக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன் A32 6BXXU 4BVC8 எனும் firmware வெர்ஷனை கொண்டிருக்கிறது. இதில் ஓஎஸ் அப்டேட் உடன் செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் செக்யூரிட்டி பேட்ச் சாங்சங் மற்றும் கூகுள் மென்பொருள்களில் கண்டறியப்பட்டிருக்கும் 50 பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிவைஸ் ஸ்டேபிலிட்டி, பெர்ஃபார்மன்ஸ் அப்டேட் ஆகியவையும் மேம்படுத்தப்பட்டுள்ளது.