Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞன்”… போக்சோ சட்டத்தில் கைது…!!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞனை போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே இருக்கும் அந்தியூர் காலனி அருமைக்காரன்தோட்டம்‌ பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன். இவர் வேறொரு பால் பூத்துக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது அந்தியூர் பகுதியில் இருக்கும் பால் பூத்தை நடத்தி வருகின்றார்.

இவர் பால் பூத்துக்கு பணிக்குச் சென்ற காலத்தில் அங்கு வேலைக்கு வரும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுபற்றி மாணவி தனது அம்மாவிடம் கூறியுள்ளார். இதனால் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தாமோதரனை கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவரை ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தியதையடுத்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |