Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-8 ஆம் வகுப்புகளுக்கு…. இல்லம் தேடி கல்வியில் அரசு புதிய அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகம் முழுதும் மக்கள் கொரோனா தொற்று காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதுமட்டுமல்லாமல் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி ஆகிய துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத பள்ளி மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது என்றே கூறலாம். கொரோனா முதல் மற்றும் 2வது அலையில் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. இதில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாதிநாட்கள் விடுமுறையாகவே இருந்தது. இந்த அடிப்படையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும், பள்ளிக்கு சென்று அங்கிருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. ஆனால் இதனை 2 ஆண்டுக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இழந்து வந்தனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 10,11, 12 வகுப்பு பயிலும் மாணவர்கள் அடுத்தாக வரவுள்ள பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். கொரோனா காலக்கட்டத்தில் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் வாயிலாக தமிழக அரசால் தொடங்கப்பட்ட திட்டம் இல்லம் தேடி கல்வி ஆகும். இந்த திட்டத்தில் 71,367 மாணவ-மாணவியர் பயனடைந்து வருகின்றனர். அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் போன்ற ஒன்றியங்களில் 536 தொடக்க பள்ளிகள், 247 நடுநிலைப்பள்ளிகள், 195 உயர்நிலைப்பள்ளிகள், 151 மேல்நிலை பள்ளிகள் என்று மொத்தமாக 1,129 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் வாயிலாக தினசரி மாலை 5:00 மணி முதல், 7:00 மணி வரை பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போதுள்ள தன்னார்வலர்களுக்கு ஒரு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 1-5 வகுப்பு வரை மாணவர்களுக்கு கற்பிக்க, பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அடுத்தாக, உயர் தொடக்க நிலை எனப்படும் 6-8 வகுப்பு மாணவ, மாணவியருக்கு கற்பிக்க பட்டம் பெற்றவர்கள் தகுதியுடையவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் இதில் தகுதியான தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, 2 நாள் பயிற்சி வழங்கப்படுவதுடன், மாதாந்திர பயிற்சியும் நடக்கிறது. தன்னார்வலராக பணிபுரியும் அனைவருக்கும் அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |