தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக இயக்கியதாக பிரபல இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் ஜீனியஸ் என்று அழைக்கப்படும் அளவிற்கு புகழ் பெற்றவர் இயக்குனர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய 7 ஜி ரெயின்போ காலனி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனையடுத்து புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் நானே வருவேன் திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஹீரோவாக தனுஷ் நடித்துள்ளார். இவர் தனது சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை மையமாகக் கொண்டே 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தை இயக்கியதாக கூறியுள்ளார். அதாவது கல்லூரி காலங்களில் தனக்கு ஏற்பட்ட காதலை மனதில் கொண்டு கதையை உருவாக்கியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.