Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“திருச்சுழியில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய பஸ் சேவை”… தொடங்கி வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு…!!!

அமைச்சர் தங்கம் தென்னரசு திருச்சுழியில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி தாலுகாவில் பல வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டல், திருச்சுழியில் இருந்து திருச்செந்தூர் வரை பஸ் சேவை, திருச்சுழியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகை உள்ளிட்டவற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலை வகித்திருந்தார்.

தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது கூறியுள்ளதாவது, விருதுநகர் மாவட்டத்தில் மக்களுக்கான பல்வேறு நலத் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு அவைகள் படிப்படியாக பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றது. திருச்சுழி தொகுதி மக்கள் அரசு கலைக்கல்லூரி கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் விரைவில் செயல்பட இருக்கின்றது. சென்ற பத்து ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சுழியில் இருந்து திருச்செந்தூர் வரை சென்ற பஸ் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் ஏற்படுத்தித் தர மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசி போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டார்கள்.

Categories

Tech |