Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கருப்பட்டி பால் கொழுக்கட்டை ..!!

சுவையான கருப்பட்டி பால் கொழுக்கட்டை :

தேவையானவை:

கருப்பட்டி     – தேவையான அளவு

புழுங்கல் அரிசி – அரை கிலோ

தேங்காய்              – துருவியது

தேங்காய் எண்ணெய்   – 2 டீஸ்பூன்

பால்: அரை லிட்டர்

செய்முறை:

புழுங்கல் அரிசியை நன்கு ஊறவைக்க வேண்டும். கருப்பட்டியை தூளாக பொடித்து வைத்து கொள்ள வேண்டும். தேங்காய் துருவி வைத்திருக்க வேண்டும். அரிசியை நன்கு மாவாக அரைத்து கொள்ள வேண்டும்.பால் நன்கு சுண்ட காய்ச்சி கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மாவை போட்டு நன்றாக கிளற வேண்டும்.. கட்டியாகும் வரை கிளற வேண்டும், பின் மாவு ஆறியதும் அதை எடுத்து உருண்டையாக பிடித்து, அதில் ஒரு சின்ன துளை போட்டு, தூளாக வைத்திருக்கும் கருப்பட்டியை உள்ளே வைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வரும்பொழுது அதில் நாம் பிடித்து வைத்திருக்கும் மாவு உருண்டையை போடா வேண்டும். வேக விட்டு எடுத்து பாலில் போட்டு சாப்பிடவேண்டும்… கருப்பட்டி பால் கொழுக்கட்டை ரெடி….

Categories

Tech |