கனடாவில் பள்ளி பேருந்து விபத்தில் 13 வயது சிறுமி பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கனடாவில் New Brunswick என்ற பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி பள்ளி பேருந்து விபத்தில் பலியானார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்தில் படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக சிறுமி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி பேருந்தின் மீது வேறு வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பள்ளிப் பேருந்தில் எந்த வாகனமும் மோதவில்லை என்று கூறியிருக்கிறார்கள். விபத்தில் பலியான சிறுமி Dorchester என்ற பள்ளியில் படித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.