சித்திரை திருவிழாவை முன்னிட்டு ரெங்கமன்னார், ஆண்டாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார்கள்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோவிலில் நேற்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு ரெங்கமன்னார் தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சேஷ வாகனத்தில் வீதி உலா வந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அடையாற்றில் இறங்கினார்கள். இதையடுத்து ஆண்டாளை சுற்றி வந்து ரெங்கமன்னார் வைரமுடி சேவை நிகழ்ச்சி நடந்தது.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மண்டகபடியானது கட்டி தெருவில் வி.பி.எம்.எம் அறக்கட்டளை சார்பாக நடந்தது. ஆண்டாள் ரெங்கமன்னார் மண்டகப்படிகளில் எழுந்தருளினர். இந்த விழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமானது வழங்கப்பட்டது. இந்த விழாவில் பிபிஎம் கல்வி நிறுவன சேர்மன் பிபிஎம் சங்கர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அதன்பின் ஆண்டாள் ரெங்கமன்னார் பக்தர்களுக்கு அருள் புரிந்தார்கள். இதைத் தொடர்ந்து பக்தர்கள் சாமிக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.